~பின்னூட்டம் போட்டுவிட்டு செல்லலாமே~

WELCOME

Sunday, April 22, 2012

அக்சய திருதிகை

அக்சய திருதிகை

a
"அட்சயம் "என்றால் தேயாமல் வளர்வது என்று பொருள்.அட்சய திருதிகை என்றால் "வளர்ச்சியை ஏற்படுத்தும் தினம் ' என்பது அர்த்தம்.இது தங்கம் வாங்கும் தினம்,என்றே பலரால் கருதப்படுகிறது.

ஐதீகப்படி இது ஒரு விரததினம். விரதம் இருந்து,விருத்தி தரும் மங்கலப் பொருள் வாங்கி அதை வைத்து இறைவனை வேண்டும் ஒரு சுப தினம்.உரிய முறைப்படி இதனை மேற்கொள்ளும் போது தான் அஷ்ட அக்ஷய லஷ்மி கடாட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.புதிதாக வாங்கும் பொருள் தங்கம் ஆகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.உப்பு ,மஞ்சள் என்பனவாகக் கூட இருக்கலாம்.



அன்றைய தினம் விரதமிருந்து ,குத்து விளக்கு ஏற்றி ,நிறைகுடம் வைத்து ,மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.பின்  புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன் வைக்க வேண்டும்.முதலில் விநாயகரை வேண்டிக்க் கொண்டு ,சிவதுதி ,அக்ஷய லக்சுமி துதி என்பவற்றை சொல்லி தூப தீப ஆராதனை செய்ய வேண்டும்.

அக்ஷய திருதிகை அன்று விரதம்இருப்பது,,பூஜை செய்வது,புதிய பொருள் வாங்குவது ,என்பவற்றை விட செய்ய வேண்டிய முக்கியமான அம்சம் தானதர்மம் செய்வது அவசியம். இவற்றை கடைப்பிடிபீர்கள் ஆயின் உங்கள் வாழ்வில் அக்சயமாய் செல்வமும்,மகிழ்வும் என்றும் பொங்கும்.Wish You Happy Akshaya Tritiya

Tuesday, March 20, 2012

உயிர் போகின்ற முதுகு வலியா? எளிய உடற்பயிற்சிகள் நல்லது !

உயிர் போகின்ற முதுகு வலியா? எளிய உடற்பயிற்சிகள் நல்லது !
backpain-tips-in-tamil

முதுகு வலி என்பது இன்றைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலையாய பிரச்சினையாக உள்ளது.முதுகுவலிக்கான காரணங்கள் குறித்தும் அதற் கான தீர்வுகளையும் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.

தண்டுவட நரம்புகள் பாதிப்பு

முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் உள்ள தண்டுவட நரம்புகள்தான் உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்கின்றன. முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும்.
வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தே இருக்கக்கூடிய சூழல், தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந் தொலைவு பயணித்தல், உடல் எடை கூடுதல், கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல் போன்ற செய்கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள 'டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த முதுகெலும்பு அமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வைட்டமின் டி சத்து

நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் 'வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல் போவதாலும் எலும்புகள் மிருதுத்தன்மை அடைந்து எளிதில் தேய்மானமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை மணி நேர மாவது உடலில் வெயில் படும்படியாகச் சூழ்நிலைகளை மாற்றிக்கொள் வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சி அவசியம்
நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவை யான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற்பயிற்சிதான். உடற் பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும். எனவே நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள் நல்லது.
இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும் பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
வெள்ளைப்பூண்டு தைலம்
வெள்ளைப்பூண்டு தைலத்தை எடுத்து முதுகுவலி உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். முதுகுவலி குணமாகும். வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து பருக முதுகுவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வைட்டமின் சி பற்றாக்குறை

வைட்டமின் சி பற்றாக்குறையினாலும் முதுகுவலி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே அன்றாட உணவில் வைட்டமின் சி சத்துள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ளுமாறு உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரே மாதிரி உட்காராதீங்க!
வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு துண்டை நனைத்து அதனை முதுகு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
அனைத்தையும் விட ஒரே பொசிசனில் அதிக நேரம் அமர்ந்திருக்க வேண்டாம். அவ்வப்போது எழுந்து நடந்தாலே முதுகுவலிக்கு காரணமான தசை அழுத்தம் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Sunday, March 18, 2012

தீபம் ஏற்றும் முறை

தீபம் ஏற்றும் முறை
 
வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலனும் நிச்சயம். விளக்கை குளிர்விக்கும் ப...ோது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.
 
விளக்கேற்றும் நேரம்
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம்.
 
விளக்கேற்றும் பலன்
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்

விளக்கேற்றும் திசை
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது. 


திருவிளக்கின் சிறப்பு
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

எண்ணெயின் பலன் தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.

நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள் 
 
திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். பொட்டு வைக்கும் போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானிக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

 
விநாயகர் - தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த
5 கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் - நல்லெண்ணெய்
 


 

Monday, February 27, 2012

ஆரோக்கிய விழிப்புணர்வு Befit awarencess- 2 HOW TO LOSE BELLY FAT

ஆரோக்கிய விழிப்புணர்வு Befit awarencess- 2  HOW TO LOSE BELLY FAT


Steps
  1. 1
    Exercise for weight loss. Aerobic exercise will facilitate fat-loss all over your body, including your belly.


2
Add resistance training  You can do resistance training with free weights, exercise machines, or resistance bands.
















3
Reduce your calorie consumption, and swap out certain foods for others



 
Always consult a physician before starting any diet plan.
4
Switch out refined grains for whole grains. In a scientific study, people who ate all whole grains (in addition to five servings of fruits and vegetables, three servings of low-fat dairy, and two servings of lean meat, fish, or poultry) lost more belly fat than another group that ate the same diet, but with all refined grains



5
Eat the better fats. Studies suggest that a diet with a higher ratio of monounsaturated fats (MUFAs) (avocados, nuts, seeds, soybeans, chocolate) can prevent the accumulation of both types of belly fat.[


Trans fats (in margarines, crackers, cookies--anything made with partially hydrogenated oils) seem to result in more fat being deposited in the abdomen, so avoid these as much as you can.[

6
Get more fiber in your diet. Soluble fiber (apples, oats, cherries) lowers insulin levels, which, as mentioned earlier, can speed up the burning of visceral belly fat

  • Add fiber to your diet slowly. If you are currently getting 10 grams of fiber a day, don't jump to 35 grams of fiber the next day. You need to give the natural bacteria in your digestive system time to adapt to your new fiber intake.
  • Leave the skin on your fruits and vegetables. Incorporating more fruits and vegetables into your diet will add fiber, but only if you eat the skin, because that's where all the fiber is. So don't peel those apples before you eat them. If you're eating potatoes, try to leave the skin in the dish (such as if making baked or mashed potatoes) or if you peel them, make a snack out of them, such as baked garlic Parmesan peels. It's also worth knowing that keeping the skin on potatoes when you cook them will help keep more vitamins and minerals in the flesh. Just don't eat any parts of skin that are green.

  • 7
    Motivate yourself by understanding the risks associated with belly fat. Losing belly fat doesn't have to be solely a cosmetic goal; understanding the health issues linked with belly fat can help motivate you. Belly fat is linked with cardiovascular disease, diabetes, and cancer.

    Wrap a tape measure around your waist at the level of your navel. A measurement of more than 35 inches (women) and 40 inches (men) is considered to be unhealthy.[2][1][6]

    8
    Drink lots and lots of water! This is the most important part of the process. Water cleanses the body system of toxins and helps increase metabolism, which in turn burn lots of fat. Our bodies are mainly made of water and drinking more water will not make you more hungry. You should drink water especially when exercising since you tend to lose water through sweating
    If you do not like water that much, try eating unprocessed foods high in water such as salads.
     
     

    Sunday, February 26, 2012

    நீங்கள் பிறந்த வருடத்தின் உலக நடப்புகளைப் பற்றி அறிய ஆவலாக உள்ளீர்களா?

     


    நீங்கள் பிறந்த வருடத்தின் உலக நடப்புகளைப் பற்றி அறிய ஆவலாக உள்ளீர்களா?உங்கள் பிறந்த வருடத்தைக் குறிப்பிட்டால் அந்த வருடத்தில் வெளியான திரைப்படங்கள் ,போர்கள்,நோபல் பரிசு வெற்றியாளர்கள் கண்டுபிடிப்புக்கள் போன்ற தகவல்மழை பொழிய     http://whathappenedinmybirthyear.com என்ற வலைத்தளத்தை  சொடுக்குங்கள். 

    Saturday, February 25, 2012

    கத்தியும் புத்தியும் -joke

    கத்தியும் புத்தியும் -ஜோக்


    "என்ன  கத்திய தீட்டிக்கொண்டு இருக்கிறாய் ?"

    "கத்தியத் தீட்டாதே புத்தியைத் தீட்டு ,எண்டு பெரியவங்க சொன்னத கவனத்தில  எடுக்காம  போய்ட்டன்"

    "என்னப்பா எதோ சொல்லுறாய் "

    "ஓமப்பா..காலமை புத்திய தீட்டி யோசிச்சுப் பேசாததால்  இப்ப கத்தியத் தீட்ட வேண்டி வந்திட்டு ."

    "ஐயோ !! அவசரப்பட்டு முடிவு எடுக்காத .."

    "வேற வழி இல்ல ,கத்திதான் இப்ப எனக்கு தேவை"

    "எதுக்கும் கொஞ்சம் ஆறுதலா  யோசிச்சால் நல்லம் ,நான் சொல்லுறத கொஞ்சம் கேள் "

    "இனி யோசிக்க ஒண்டும் இல்ல,ஒரு தரத்துக்கு நாலு தரம் யோசிச்சித்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறன் "

    "கத்தி எடுக்கிற அளவு விபரீதம் அப்பிடி என்னதான் நடந்தது ,அத முதல் சொல்லு "

    "அதுவா? காலம மைசூர்பாகு சாப்பிட ஆசையா இருக்கு எண்டு ,எண்ட wife ட்ட பின் விளைவ கொஞ்சமும் யோசிக்காம சொல்லிட்டன் ,அத கேட்டு அவ உடனே மைசூர்பாகு செய்திட்டா..ஆனா பல்லால கடிக்க முடியல்ல,அவ செய்தத சாப்டாம விட்டாலும் அவக்கு கோபம் வந்திடும்,அதான் கத்தியால வெட்டி சாபிட்டுவம் எண்டு ...."

    "!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"

    Wednesday, February 22, 2012

    ஆரோக்கிய விழிப்புணர்வு Befit awarencess- 1

    ஆரோக்கிய விழிப்புணர்வு                             





     உடல் ஆரோக்கியத்திலும் அழகிலும் பாதிப்பை ஏர்ப்படுத்தும் முக்கிய காரணி அதீத கலோரியால் ஏற்படும் தேவையற்ற உடல்பருமன்.அதனால் உடற்பருமன் உள்ளவர்கள் அனைவரும் நோயாளிகள் என்பது கருத்து அல்ல.


    ஒருவரின் உடலியல்பு ,ஒரு நாளில் அவர் செய்யும் வேலைகள் என்பவற்றைப் பொறுத்து  அவரவர் கலோறித் தேவையும் அமைகிறது.
    அடியோடு இனிப்பு ,கொழுப்புப் பொருட்களை உண்ணாமல் இருப்பது பயனற்றது.அன்றாடம் நாம் செய்யும் காரியங்களுக்கு தனை கலோரிகளைச்  செலவளிக்கின்றோம், என்பதை கணக்கெடுத்து அதற்கு ஏற்ப நமது உணவில் கலோரிகள் அமையும்படி பார்த்துக்கொண்டால் அதவே ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை. இதுவே ஆரோக்கிய விழிப்புணர்வு ஆகும்.



    நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கான கலோரிகள்

    வேலைகள்                                                               செலவாகும் கலோரிகள் (1 மணித் )

    1 .வீட்டு வேலைகள்                                              350
     (சுத்தம் செய்தல்)

    2 .சமையல்                                                                 250
                                                                                         
    3 .சாப்பிடுதல்                                                              50
                                                            
    4 .டைப் பண்ணுதல்                                                  50

    5 .அலுவலக வேலைகள்                                      200

    6 .பல் துலக்கல்,தலை  வாரல்                           100

    7 .குளிப்பது                                                                 100

    8 .துணி துவைப்பது                                                100

    9 .குனிந்து நிமிர்தல்                                                300

    10 .மாடிப்படிகளில் ஏறி இறங்கல்                     800

    11 .தரை துடைத்தல்                                                200  

    12 .சைக்கில் ஓடல் (மெதுவாக)                         300
        .சைக்கில் ஓடல் (வேகமாக)                           600

    13 .உடற்பயிற்சிகள்                                               500

    14 .பட்மிண்டன்                                                        400

    15 .பாடுவது                                                                50

    16 .மெதுவாக ஓடுதல்                                           600
         .வேகமாக ஓடுதல்                                            900

    17 . மெதுவாக நடத்தல்                                         200
          . வேகமாக  நடத்தல்                                        300 

    18   மெதுவாக நீச்சல்                                             200
    .      வேகமாக   நீச்சல்                                            300       

    இனி சாதாரணமாக நாம் உட்கொள்ளும் உணவுகளின் கலோரி அளவுகள்....(சுமாராக)

    உணவுகள்                                                                      கலோரி

    1  பாண் துண்டுகள்         2                                            80                      

    2    இட்லி                            2                                        135
                      
    3      ரவை உப்புமா - 1    tea  cup                             100

    4     பூரி                           2                                             100

    5  சோறு -               1 tea கப்                                       100

    6    குழம்பு          1      கப்                                           75

    7  மீன்-  பொரித்தது                                              150
                    
    8  பருப்பு                                                                    50

    9  Tea                                                                           120

    10  மரக்கறி                                                               30

    11  முட்டை          அவித்தது                               90

    12  உருளைக்கிழங்குகறி                                 150

    13  அப்பளம்                                                             20

     14   கோழிக்கறி                                                     180

     15     ஐஸ் கிரீம் -   100g                                       220

     16  கோன் பிளக்ஸ்  - 1    கப்                                95

     17      சாக்லேட்              - 30g                                  140

    18      பேரிச்சை            - 30g                                     85

    19      ஸ்வீட்ஸ்                                                        400                                                      

    20    ஆப்பிள்          -1                                                   85

    21    திராட்சை - 1 கப்                                                85
              
    22    வாழைப்பழம்-  1                                             100
                   
    23    ஆரஞ்சு           -      1                                            50

    24     கத்தரிக்காய் வதக்கல்                                  80

    இந்த அட்டவனையை

    வைத்துக் கொண்டு ,நாம் சாப்பிடும் அளவுகளை கணக்கிட்டு ,வேலை செய்யத்தேவை யானதை விட உட்கொள்ளும் கலோரிகளை குறைத்துக் கொண்டால் அழகும் ஆரோக்கியமும் நம் கையில்.